000 | : | nam a22 7a 4500 |
008 | : | 170508b ii 000 0 tam d |
245 | : | _ _ |a நான்முகன் |
300 | : | _ _ |a புராணச் சிற்பம் |
340 | : | _ _ |a கருங்கல் |
500 | : | _ _ |a யோகத்தில் அமர்ந்திருக்கும் நான்முகன் |
510 | : | _ _ |a
|
520 | : | _ _ |a கழுகு மலை வெட்டுவான் கோயிலின் கருவறை விமானத்தின் முதல் தளத்தின் வடக்குப் பகுதியில் உள்ள கிரீவக் (கழுத்து) கோட்டத்தில் நான்முகன் யோக நிலையில், இரு கால்களையும் மடக்கி, அர்த்த பத்மாசனத்தில் அமர்ந்துள்ளார். அவருக்கு மூன்று தலைகள் தெரிகின்றன. ஜடாபாரம் தரித்துள்ளார். நான்கு திருக்கைகளில் பின்னிரு கைகளில் வலதில் அக்க மாலையும், இடதில் கெண்டியும் கொண்டுள்ளார். முன்னிரு கைகளில் வலது முன் கை விரல்கள் சிதைந்துள்ளன. இடது முன் கை இடது தொடையில் வைத்தபடி உள்ளது. கணுக்கால் வரை நீண்ட ஆடை உடுத்தியுள்ளார். நீள் காதுகளில் மகர குண்டலங்கள், தோள்களில் வாகுமாலை அமைந்துள்ளன. கழுத்தில் சவடி அணி செய்கின்றது. வயிற்றில் உதரபந்தம் காட்டப்பட்டுள்ளது. துணியாலான முப்புரிநூல் பட்டையாக அணிந்துள்ளார். முப்புரி நூலின் பிரம்மமுடிச்சு இடது மார்பில் அமைந்துள்ளது. கைகளில் தோள் வளை விளங்குகின்றது. முன் கை மணிக்கட்டில் இரண்டிரண்டு வளைகள் காட்டப்பட்டுள்ளன. இடையில் அரைப்பட்டிகை உள்ளது. உடலை நேராக நிமிர்த்திய படி அமர்ந்திருக்கும் நான்முகன் இளமைத் தோற்றப் பொலிவுடன் விளங்குகிறார். |
653 | : | _ _ |a பிரம்மன், பிரம்மா, நான்முகன், படைப்புக் கடவுள், பாண்டியர் குடைவரை, கழுகு மலை, கழுகு மலை வெட்டுவான் கோயில், முற்காலப் பாண்டியர் கலைப்பாணி, பாண்டியர் ஒற்றைத் தளி, பாண்டியர் கலைகள், பாண்டிய நாடு, பாண்டியர், பாண்டிய மண்டலம் |
700 | : | _ _ |a காந்திராஜன் க.த. |
752 | : | _ _ |a கழுகு மலை வெட்டுவான் கோயில் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c கழுகு மலை |d தூத்துக்குடி |f கோவில்பட்டி |
905 | : | _ _ |a கி.பி.8-ஆம் நூற்றாண்டு/முற்காலப் பாண்டியர் |
914 | : | _ _ |a 9.15296112 |
915 | : | _ _ |a 77.70432074 |
995 | : | _ _ |a TVA_SCL_000200 |
barcode | : | TVA_SCL_000200 |
book category | : | கற்சிற்பங்கள் |
Primary File | : |